2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

அரசாங்கம் தவறிவிட்டது

A.K.M. Ramzy   / 2021 மே 30 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புதுடெல்லி

 

கொரோனாவை எதிர்த்து போராட சரியான எண்ணம், கொள்கை, தேவை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறி உள்ளார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று, ‛மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இன்றைய நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் கொரோனா முதல் அலையில் நாம் துணிச்சலுடன் போரிட்டோம். இந்த இரண்டாவது அலையில் நமது நாடு நடத்தி வரும் போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம் எனக்கூறியிருந்தார்.

இது தொடர்பாக டுவிட்டரில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பதிவிட்டுள்ளதாவது: கொரோனாவுக்கு  எதிராக போராட, உங்களுக்கு சரியான எண்ணம், கொள்கை, உறுதிப்பாடு தேவை.  இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்து உள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .