2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

அரசியல் பிரமுகர்கள் 25 பேரின் அந்தரங்க வீடியோக்கள் சிக்கின

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 17 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒடிசாவின், கலஹண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ‘அர்ச்சனா நாக்‘.

26 வயதான இவர், தனது கணவரின் உதவியுடன் அம் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா தயாரிப்பாளர்கள் எனப்  பிரபலமானவர்களைக் குறிவைத்து, அவர்களுடன் நெருங்கிப்  பழகி, அவர்களுடன் தனிமையில் இருக்கும்போது அதனை ரகசியமாக வீடியோ மற்றும் புகைப்படமெடுத்து, எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டு விடுவதாகக் கூறி பணம் பறித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அர்ச்சனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இது குறித்து  பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து இவ்விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனையடுத்து அர்ச்சனாவைக் கைது செய்த பொலிஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில் விசாரணையில் ”அர்ச்சனா  கடந்த 4 ஆண்டுகளில் 30 கோடி ரூபாவை குவித்துள்ளார் எனவும், குறிப்பாக சொகுசு கார்கள், நான்கு உயர் இன நாய்கள் மற்றும் ஒரு வெள்ளை குதிரையுடன் ஒரு ஆடம்பரமான வீடொன்றையும் வைத்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் இக்  குற்றங்கள் அனைத்திற்கும் அவரது கணவர் ஜகபந்து சந்து உடந்தையாக இருந்துள்ளார் எனவும்,அவர்களிடம் பல முக்கிய பிரபலங்களின் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சிக்கியுள்ளன எனவும் தெரியவந்துள்ளது.

 

இதில் குறிப்பாக 18 எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட 25 அரசியல் தலைவர்கள் தொடர்பு பட்டுள்ளனர் எனவும்  தெரியவந்துள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X