Mithuna / 2024 பெப்ரவரி 19 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை மற்ற மாநிலங்களும் ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், ஒடிசா அரசு உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக், “உறுப்புகளை தானம் செய்யும் நபரின் உடல் மீது மூவர்ண கொடி போர்த்தி 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்படும்.
மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை அவர்களது உறவினர்கள் தானம் செய்ய தைரியமாக முடிவெடுத்து பல உயிர்களை காப்பாற்ற வேண்டும். நன்கொடையாளர்களின் தைரியம் மற்றும் தியாகத்தைக் கௌரவிப்பதே மாநில அரசின் நோக்கம். உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடல்கள் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026