Nirosh / 2021 மே 30 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸால் உயிரிழந்த நபரை ஆற்றில் தூக்கி வீசும் வீடியோ காட்சிகள் வெளியாகி, சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
பிபிஇ உடையணிந்த ஒருவரும், மற்றொரு ஆணும் இணைந்து உயிரிழந்த கொரோனா வைரஸ் தொற்றாளரை அங்குள்ள ஆற்றில் தூக்கி வீசுகின்றனர். இதனை கையடக்கத் தொலைபேசியில் ஒருவர் மறைமுகமாக வீடியோ எடுத்துள்ளார்.
இம்மாதம் 25ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தொற்றாளர், 28ஆம் திகதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும், அவர்கள் சடலத்தை ஆற்றில் தூக்கி வீசியுள்ளனர்.
இதுத் தொடர்பில் அந்நாட்டுப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு, குறித்த இரு நபர்களுக்கு எதிராகவும் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

18 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
3 hours ago