Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 செப்டெம்பர் 17 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரோயல் அவுஸ்திரேலிய கடற்படை நடத்தும் பன்னாட்டுப் பயிற்சியான ககாடு-2022இல் பங்கேற்பதற்கு, ஐஎன்எஸ் சத்புரா மற்றும் இந்தியக் கடற்படையின் P-8I கடல்சார் ரோந்து விமானம் ஆகியவவை அவுஸ்திரேலியாவின் டார்வினை சென்றடைந்துள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
துறைமுகம் மற்றும் கடலில் இரண்டு வாரம் இடம்பெறவுள்ள பயிற்சியில் 14 கடற்படைகளின் கப்பல்கள் மற்றும் கடல்சார் ரோந்து விமானங்கள் ஈடுபடவுள்ளன.
துறைமுக பயிற்சியின்போது, பயிற்சியில் பங்கேற்கும் கடற்படைகளுடன் செயல்பாட்டு திட்டமிடல் தொடர்புகள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் கப்பலின் பணியாளர்கள் ஈடுபடுவார்கள் என்று அமைச்சு அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பிட்ச் பிளாக் 22 பயிற்சியில் பங்கேற்ற இந்திய விமானப்படை குழு பன்னாட்டு பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் மற்றொரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரோயல் அவுஸ்திரேலிய விமானப்படையால் டார்வின் விமானப் படைத்தளத்தில் மூன்று வாரங்களுக்கும் மேல் நடத்தப்பட்ட பயிற்சியில் 17 விமானப்படைகளும் 2,500க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
இரவும் பகலும் பல்வேறு விமான போர் பயிற்சிகளில் படைகள் பங்கேற்றதாகவும் சிக்கலான வான்வழி காட்சிகளை உருவகப்படுத்தி, பயிற்சிகள் இடம்பெற்றதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
5 hours ago
26 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
26 Jul 2025