2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இ.பி.எஸ் தேர்வு செல்லாது: நீதிமன்றம் அதிரடி

Editorial   / 2022 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அ.தி.மு.க) பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு  (ஓபிஎஸ்) ஆதரவாக வெளியான நிலையில், அவரது ஆதரவாளர்கள் தீர்ப்பு வெளியானதையடுத்து இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

அ.தி.மு.க, பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த வழக்கில் நேற்று (17) காலை 11.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

அதில், ஜூலை 11 ஆம் திகதி நடைபெற்ற  அ.தி.மு.க., பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23 ஆம் திகதி நடைபெற்ற அ.தி.மு.க., பொதுக்குழுவின்போது இருந்த நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார். இதனால், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவி மீண்டும் உயிர்பெற்றுள்ளது. அதுபோல, எடப்பாடியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி இரத்தாகி உள்ளது.

இந்த நிலையில், தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்ததால், அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். ஓபிஎஸ் வீடு அருகே அ.தி.மு.க.,வினர் குவிந்து பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகின்றனர்.  

(வ​ரைகலை: நன்றி புதிய தலைமுறை)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X