Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 நவம்பர் 02 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
புனேவில் காது கேளாதவர்கள் மற்றும் வாய் பேச முடியாதவர்களால் நடத்தப்பட்டுவரும் டெர்ராசின் (Terrasinne) என்ற உணவகம், மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இங்கு வருகை தரும் வாடிக்கையாளர்களும் கூட, சைகை மொழியிலேயே தங்களுக்கு விருப்பமான உணவுகளை கேட்டுப் பெற்றுக் கொள்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு காணப்படும் உணவுப் பட்டியல் அட்டையில் (மெனு கார்ட்) சைகை மொழியில் எந்தெந்த உணவுகளை எப்படி கேட்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதால் அதனைப் பின்பற்றி தேவையான உணவுகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
மேலும் வாடிக்கையாளர்கள் உண்டு முடித்தவுடன் உணவகப் பணியாளர்கள் உணவு எப்படி உள்ளது எனக் கேட்டுத் தெரிந்துகொள்கின்றனர்.
இந்நிலையில் இவ் உணவகம் குறித்த வீடியோவொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
34 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago