Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 ஜூலை 23 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக முதலமைச்சராகவுள்ள மு.க.ஸ்டாலின் ‘திருக்குறளைத் தேசிய நூலாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் ‘என்று தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடியிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் கணேஷ் என்ற ஓவியர், தமிழ் பிராமி, வட்டெழுத்துகள், தற்போதைய நவீனப்படுத்தப்பட்ட எழுத்துக்கள் என 741 எழுத்துக்களைப் பயன்படுத்தி வரைந்த திருவள்ளுவர் ஓவியத்தைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
மேலும் அப்பதிவில் மு.க.ஸ்டாலினையும் டக் (Tag) செய்துள்ளார்.
இந்நிலையில் அவ் ஓவியத்தைப் பார்த்த மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாக தனது டுவிட்டர் பக்கத்தில் ”அன்பின் வழியது உயிர்நிலை" என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால், தமிழ் எழுத்துகளால் ஓவியக் காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஓவியமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
15 minute ago
41 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
41 minute ago
3 hours ago
3 hours ago