2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இணையவழி டேட்டிங்கை அரசு ஊக்குவிக்கின்றது

Freelancer   / 2022 ஜூலை 19 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் பார்சி மக்களை 'மீட்டெடுக்க' ஒரு திட்டத்தை மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகம் வகுத்துள்ளது.

பார்சி சமூகத்தில் தகுதியான வயது வந்தவர்களில் 30 சதவீதம் பேர்  திருமணம் ஆகாதவர்கள் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இதனால்   'ஜியோ பார்சி' என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தால் பார்சி ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே 'இணையவழி டேட்டிங்' மற்றும் திருமண ஆலோசனைகளை ஊக்குவிக்கிறது.

பார்சி சமூகத்தில் மொத்த கருவுறுதல் விகிதம் ஒரு ஜோடிக்கு 0:8 என சராசரியாக இருப்பதால், பார்சி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கும் குழந்தைகளை பெறுவதற்கும் ஊக்குவிப்பது அவசியம் என்று கூறினார். ஒவ்வொரு ஆண்டும் 200 முதல் 300 குழந்தைகள் பிறப்பதாகவும், அதே நேரத்தில் 800 பார்சிகள் இறக்கின்றனர்.   

பார்சி சமூகத்தில் குறைந்த குழந்தை பிறப்புக்கு திருமணமாகாத பெரியவர்கள் தான் பெரிய காரணம் என்றும், பார்சி சமூகத்தில் 30 சதவீத பெரியவர்கள் திருமணத்திற்கு தகுதி பெற்றிருந்தாலும் திருமணமாகாதவர்களாக உள்ளனர் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
   
 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X