2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

இந்திய அமைச்சரவை இன்று மாற்றம்

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 07 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி :

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுமுகங்கள் பலருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. கடந்த, 2019 லோக்சபா தேர்தலில் வென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசாங்கம் அமைந்துள்ளது. 

  புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று மாலை, 6:00 மணிக்கு நடக்கும் என தெரிகிறது. கடந்த, 2019ஆம் ஆண்டில் மத்திய அமைச்சரவை பதவியேற்கும்போதே எங்களுக்கு வாய்ப்பு தரப்பட்டது. சில காரணங்களால் ஏற்க முடியவில்லை.

கடந்தவை, கடந்தவையாக இருக்கட்டும். தற்போது பிரதமர் மோடி, என்ன முடிவு எடுக்கிறாரோ, அதை ஏற்க தயாராக உள்ளோம் என முதலமைச்சர் நிதிஷ் குமார்பீஹார் தெரிவித்துள்ளார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X