Freelancer / 2025 ஜூன் 01 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் இதுவரை 3,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சனிக்கிழமை (31) ஒரே நாளில் மட்டும் 685 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதில் கேரளாவில் 1,336 பேரும், மராட்டியத்தில் 467 பேரும், டெல்லியில் 375 பேரும், குஜராத்தில் 265 பேரும், கர்நாடகாவில் பேரும் 234, மேற்கு வங்காளத்தில் 205 பேரும், தமிழ்நாட்டில் 185 பேரும், மற்றும் உத்தரபிரதேசத்தில் 117 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லி, கேரளா, கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா ஒருவர் வீதம்உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பரவலை எதிர்கொள்ள அனைத்து மாநிலங்களும் தயார் நிலையில் இருக்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் படுக்கைகள், ஒக்சிஜன், மருந்துகள் கையிருப்பு இருப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
8 minute ago
17 minute ago
21 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
21 minute ago
24 minute ago