2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவுக்குள் நுழைய கனடா பிரஜைகளுக்குத் தடை

Freelancer   / 2023 செப்டெம்பர் 21 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1980களில் சீக்கியர்களுக்கு "காலிஸ்தான்" என தனி நாடு கோரியதால், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாதம் தலைவிரித்தாடியது. இதனை அடுத்தடுத்த இந்திய அரசாங்கங்கள் பல கடுமையான நடவடிக்கைகள் மூலம் எதிர்கொண்டு அழித்தன. இருப்பினும், ஆங்காங்கே உலகின் பல இடங்களில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இக்கோரிக்கைகளுடன் இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் இன்னமும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் குரல் கனடா நாட்டில் வலுப்பெற்றிருக்கிறது

கடந்த ஜூன் மாதம், காலிஸ்தான் பிரிவினைவாதியும், தீவிரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கனடா நாட்டின் வேன்கூவர் நகரில் சுட்டு கொல்லப்பட்டார்.

இந்த கொலையில் இந்தியாவிற்கு பங்கிருப்பதாக சில தினங்களுக்கு முன் கனடா ஜனாதிபதி ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். தொடர் நடவடிக்கையாக இந்திய தூதரக அதிகாரியையும் கனடா அரசு வெளியேற்றியது. இந்தியர்களை அதிர வைத்த இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த இந்திய அரசு, பதில் நடவடிக்கையாக இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதரை வெளியேறுமாறு உத்தரவிட்டது.

 இந்நிலையில் கனடா நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்பும் அந்நாட்டு குடிமக்களுக்கு இந்தியாவில் நுழைய வழங்கப்படும் "விசா" எனப்படும் உள்நுழையும் அனுமதியை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X