2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

இனிமேல் ஜீன்ஸ், லெகின்ஸ் அணியத் தடை

Ilango Bharathy   / 2022 நவம்பர் 09 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச ஊழியர்கள் அனைவருக்கும் ஆடைக் கட்டுப்பாடு விதித்து அஸாம் அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அஸாம் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ” அலுவலக நேரத்தில் அரச ஊழியர்கள்  கட்டாயமாக முறையான பாரம்பரிய உடைகளை அணிய வேண்டும் .

` குறிப்பாக ஆண்கள் சட்டை மற்றும் நீளக் காட்சட்டையும், பெண்கள் புடவை மற்றும் சல்வார்-கமீஸ்  ஆடைகளையும் அணியலாம்` என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு புதன்கிழமையும் ஊழியர்கள் பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஜீன்ஸ் மற்றும் லெகின்ஸ் அணியவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது ஊழியர்களுக்கு சீருடையும் வழங்கப்படவுள்ளதாகவும்  சட்டப்பேரவை நடவடிக்கைகளைப்  பதிவு செய்யும் ஊடகவியலாளர்களும் இனி அரசாங்க வழிகாட்டுதலின் படிதான் ஆடைகளை அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்கத் தவறும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X