2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

இரசாயன ஆலையில் தீ ; 18 பேர் பலி

A.K.M. Ramzy   / 2021 ஜூன் 08 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனே

புனே இரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 15 பெண்கள் உட்பட 18 தொழிலாளர்கள், உடல் கருகி பலியாகினர்.

மஹாராஷ்டிராவின், புனே மாவட்டத்தின் பிரங்குட்டில் உள்ள தொழிற்சாலை பகுதியில்,இரசாயனம் தயாரிக்கும் தனியார் ஆலை அமைந்துள்ளது.ஆலையின் ஒரு பகுதியில், நேற்று மாலை திடீரென தீப்பற்றியது. இதில், அங்கு பணியில் இருந்த, பலர் சிக்கினர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதன்போது,  18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இவர்களில், 15 பேர் பெண்கள் என கூறப்படுகிறது.

 மேலும், ஐந்து பேரை தேடும் பணியில், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.ஆலையின், 'பேக்கேஜிங்' பகுதியில் இருந்த, 'பிளாஸ்டிக்' பொருட்களில் தீப்பற்றியதாகவும், அது மற்ற பகுதிகளுக்கு விரைந்து பரவியதாகவும், ஆலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .