A.K.M. Ramzy / 2021 மே 19 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

` என்னுடன் பயணிக்க முடியாதவர்களுக்கு இரண்டு கதவுகளும் திறந்தே இருக்கும்' என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வகித்து வந்த முருகானந்தம் பதவி விலகியிருக்கிறார். அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியிருப்பதாகக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதேவேளை, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை இராஜினாமா செய்து வருகின்றனர்.
இதையடுத்து, `கமலின் தவறான நடவடிக்கைகளே தோல்விக்குக் காரணம். கட்சியில் சர்வாதிகாரம் தலைதூக்குகிறது. தேர்தல் பணிகளைக் கவனிக்க வந்த சங்கையா சொல்யூசன்ஸ் நிறுவனத்தால் தான் இவ்வளவு பெரிய தோல்வி ஏற்பட்டது,' என கூறி ம.நீ.மவின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்த மகேந்திரன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே விலகினார்.
தொடர்ந்து சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ், சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளராக இருந்த பத்மபிரியா உள்ளிட்டோரும் கட்சியில் இருந்து வெளியேறினர். இதுதவிர, திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட 414 வாக்குச் சாவடிகளில் நியமிக்கப்பட்ட 200 கிளைச் செயலாளர்கள் மற்றும் 2000 கிளைக் கழக உறுப்பினர்களும் தங்கள் பொறுப்புகளையும் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .