A.K.M. Ramzy / 2021 ஜூன் 06 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெங்களூரு,
கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பாவை, கட்சி உயர்பீடம் மாற்ற விரும்புவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து முதல் முறையாக மௌனம் கலைத்துள்ள முதலமைச்சர் எடியூரப்பா, 'கட்சி உயர்பீடம் கூறினால் உடனடியாக இராஜினாமா செய்வேன்' என்றார்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த முதலமைச்சர் எடியூரப்பா, ' பாரதிய ஜனதாவில் மாற்றுத் தலைமை இல்லை என நான் கருதவில்லை. டெல்லியில் உள்ள கட்சியின் உயர்மட்ட தலைமை கூறும் வகையில் நான் முதலமைச்சராக இருப்பேன். அவர்கள் எப்போது சொல்கிறார்களோ அப்போது பதவியில் இருந்து விலகத் தயார்' என்றார்.
எடியூரப்பாவின் மகனும் மாநில பாஜக துணைத் தலைவருமான விஜேந்திரா நேற்று பாஜக தேசியத்தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்துப் பேசியிருந்த நிலையில், எடியூரப்பா மேற்கண்டவாறு பேசியுள்ளார்.
18 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
3 hours ago