2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடுகள்

Freelancer   / 2023 செப்டெம்பர் 17 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூரை அடுத்த மேல்மொணவூரில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரரம்பித்து வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.11 கோடி (இந்திய ரூபா) 220 வீடுகள் உள்பட ரூ.176 கோடியில் 3,500 புதிய வீடுகள் கட்டும் பணிகள் நடந்தன.

வேலூர் உள்பட 13 மாவட்டங்களில் 19 முகாம்களில் ரூ.79 கோடியே 90 இலட்சத்தில் 1,591 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வேலூரை அடுத்த மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இன்று காலை(17)  நடைபெற்றது.

இந்த நிலையில் வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு உள்ள தந்தை பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டி முடிக்கப்பட்ட 1,591 புதிய வீடுகளை திறந்து வைத்தார். பின்னர் முதலமைச்சர் மேல்மொணவூர் முகாமை சேர்ந்த 5 பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X