A.K.M. Ramzy / 2021 ஜூன் 15 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சனுஷா தனது புகைப்படம் ஒன்றை, தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். அதில் சனுஷா மிகவும் குண்டாக ஆளே அடையாளம் காணமுடியாத வகையில் காணப்பட்டார். சில ஹார்மோன் பிரச்சினைகள் காரணமா அவர் உடல் எடை கூடிவிட்டதாகவும், அதை குறைப்பதற்கான முயற்சியில் அவர் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
எனினும் இவரின் படத்தை வைத்து, சமூக வலைத்தளங்களில் உருவக்கேலி செய்து வந்தனர். இதனால், கோபம் அடைந்த சனுஷா , உருவக்கேலி செய்தவர்களுக்கு அளித்த பதில் வருமாறு: 'எனது உடல் எடை பற்றி கவலைப்படுபவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், ஒருவர் எடை குறைப்பதற்காகவும், அழகாக இருப்பதற்காகவும் மட்டுமே உயிர் வாழ்வது இல்லை. ஒருவரின் உடல் தோற்றத்தை வைத்து தைரியமாக கேலி செய்யும் நீங்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதாவது, ஒருவரை நோக்கி நீங்கள் விரல் நீட்டும்போது மற்ற விரல்கள் உங்களை நோக்கி இருக்கிறது. ஆகவே நீங்களும் நேர்த்தியானவர் இல்லை. உங்களுக்கு மனரீதியான பிரச்சினை உள்ளது. உங்கள் உடலை கவனித்துக்கொள்ளுங்கள். என்று கூறியுள்ளார்.
இவர், மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான இரண்டு மாநில விருதுகளை பெற்றவர்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago