Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 02 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பையில் உடலுறவுக்கு மறுத்த மனைவி மீது தீவைத்து கொல்ல முயன்ற அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் தீக்காயமடைந்த மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள செம்பூர் அருகே இருக்கும் வாஷி நாகா பகுதியில் வசித்து வரும் தினேஷ் அவ்ஹாத். அவருக்கு 46 வயது அவரது மனைவி ரேகா. 38 வயதுடையவர் ரேகா,வீட்டு வேலை செய்துவருகிறார்.
இந்த நிலையில் தான் சனிக்கிழமை (31) திடீரென்று கணவன்- மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த தினேஷ் அவ்ஹாத் தனது மனைவி ரேகாவை தாக்கி உள்ளார்.அது மட்டு மின்றி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து ரேகா மீது ஊற்றிய தோடு, கியாஸ் அடுப்பில் எரிந்து கொண்டிருந்த தீயை பேப்பரில் பிடித்து ரேகா மீது வீசி உள்ளார்.
இதனால் ரேகாவின் உடலில் தீ பிடித்தால். மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவ மனையில் ரேகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது வயிறு,கால்,கைஉள்ளிட்ட இடங்களில் தீக்காயம் ஏற்பட்டது. மொத்தமாக அவரது உடலில்33 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து அவருக்கு வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது பற்றி ஆர் சி எப் பொலிஸில் புகார் செய்யப்பட்டது.Recom பொலிஸார் வழக்குப்பதிவு செய்து ரேகாவின் கணவர் தினேஷ் அவ்ஹாத்தை கைது செய்தனர்.
தினேஷ் அவ்ஹாத் மீது கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக தினேஷ் அவ்ஹாத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர் கூறிய தகவல் அனைவரையும் அதிர வைத்தது.
சம்பவம் தொடர்பாக தினேஷ் அவ்ஹாத் பொலிசஸில் பரபரப்பான வாக்கு மூலம் அளித்துள்ளார்.இது தொடர்பாக பொலிஸார் கூறுகையில், ‛‛கைதான தினேஷ் அவ்ஹாத்திடம் விசாரணை மேற்கொண்டோம்.
கடந்த வெள்ளிக்கிழமை மதியம் மனைவியுடன் உடலுறவு வைக்க தினேஷ் அவ்ஹாத் அழைத்துள்ளார். ஆனால் வேலை அதிகம் உள்ளது என்று கூறி மனைவி மறுத்துள்ளதோடு, வீட்டு வேலைகள் செய்ய புறப்பட்டுள்ளார். இதில் கோபமாகி தினேஷ் அவ்ஹாத் அவர் மீது மண்ணெயை ஊற்றி தீவைத்ததாக கூறியுள்ளார்.
14 minute ago
29 minute ago
47 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
29 minute ago
47 minute ago
51 minute ago