Editorial / 2021 மே 11 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்துவருகின்றது. இதன் காரணமாக அங்குள்ள வைத்தியசாலைகளில் படுக்கைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறைகள் நிலவிவருகின்றன.
குறிப்பாக வைத்தியசாலைகளில் ஒட்சிசன் பற்றாக்குறை காணப்படுவதால் வைத்தியசாலைகள் அண்மைக்காலமாகத் திணறிவருகின்றன.
இந்நிலையில் வசந்தகுமார், சத்யராஜ் என்ற இரு இளைஞர்கள் கொரோனாத் தொற்றாளர்களுக்காக சென்னையில் அவசர ஒட்சிஜன் ஓட்டோ சேவையை அறிமுகம் செய்துள்ளனர்.
இச் சேவையின் மூலம் 126 கொரோனாத் தொற்றாளர்களின் உயிர்களை இவர்கள் காப்பாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் பொதுமக்களுக்கு முக கவசம், கிருமி நாசினி மற்றும் உணவு விநியோகம் என பல்வேறு உதவிகள் செய்துவரும் இவர்கள், தற்போது ஒட்சிஜனின் தேவையறிந்து அலுவலக பயன்பாட்டிற்கு வைத்திருந்த இரண்டு ஓட்டோக்களையும் ஒட்சிஜன் சிலின்டர்கள் பொருத்திய இலவச ஓட்டோக்களாக மாற்றியுள்ளனர்.

இவர்களின் மருத்துவ சேவை, பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
7 minute ago
22 minute ago
36 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
22 minute ago
36 minute ago
46 minute ago