2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

உறவினர்கள் 12 பேரைப் பறிகொடுத்த எம்.பி

Ilango Bharathy   / 2022 நவம்பர் 02 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

குஜராத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க தொங்கு பாலம் கடந்த 30ஆம் திகதி திடீரென இடிந்து விழுந்தது.

இச்சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இவ்விபத்தில் ராஜ்கோட் தொகுதி பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.பி. மோகன்பாய் குந்தாரியாவின் குடும்பத்தினர் 12 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து குந்தாரியா கூறுகையில்,”இவ்விபத்தில் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளமை மிகவும் வேதனை அளிக்கின்றது. அத்துடன் எனது  கண் முன்னே  ஆற்றில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன

இவ்விபத்துக்கு காரணமான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X