2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

உறுப்பினர் சேர்க்கைக்கு விரைவில் செயலி அறிமுகம்

Mithuna   / 2024 பெப்ரவரி 23 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த 2-ம் திகதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இந் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாகப் பிரித்து பொறுப்புகள் வழங்க விஜய் முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் குறித்த அறிவிப்பு 10 நாட்களுக்குள் வெளியாகும் என்றும் பொறுப்பாளர்கள் நியமனத்திற்கு பிறகு உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு செயலியும் விரைவில் அறிமுகமாக உள்ளது எனவும் கூறப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .