2025 ஜூலை 26, சனிக்கிழமை

உலகளாவிய தடுப்பூசி சான்றிதழுக்கு பூனாவல்லா அழைப்பு

Freelancer   / 2022 ஒக்டோபர் 03 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக பொருளாதாரத்தை மோசமாக பாதித்த கொரோனா வைரஸின் அடுத்த சர்வதேச பரவலுக்கு முன்னர், ஐ.நா மற்றும் உலக வர்த்தக அமைப்பு போன்ற பலதரப்பு நிறுவனங்கள் தடுப்பூசிகளின் சான்றிதழை ஒத்திசைக்க வேண்டும் என, இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆதார்  பூனவல்லா கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் இடம்பெற்ற ஃபோர்ப்ஸ் குளோபல் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் மாநாட்டில் இந்த தெளிவான அழைப்பை பூனாவல்லா விடுத்திருந்தார்.

கொரோனாவில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த பூனவல்லா, 

உலகளாவிய தலைவர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட காலநிலை தொடர்பான ஒப்பந்தங்களின் உதாரணத்தை மேற்கோள் காட்டிய அவர், உலகத் தலைவர்கள் எதற்கும் உடன்படுவது மிகவும் கடினம் என்றாலும், அதற்காக (முன்மொழிவு) தான் தொடர்ந்து வாதிடுவேன் என்றார்.

எல்லைக் கடக்கும் இடங்களில் தடுப்பூசிகள் விநியோகத்தின் போது எதிர்கொள்ளும் தடைகளை மேற்கோள் காட்டிய அவர், தொற்றுநோய்களின் தொடக்கத்தில் தடுப்பூசி சான்றிதழ்கள் மற்றும் மருத்துவ பரிசோதனை ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

மனித குலத்தின் நலனுக்காக தடுப்பூசி மற்றும் உடல்நலம் தொடர்பான வணிகத்தை மேலும் பன்முகப்படுத்த சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியாவின் பரந்த திட்டங்களைப் பற்றியும் பூனாவல்லா புதுப்பித்துள்ளார்.

மக்களுக்கான உடல்நல காப்புறுதியை மேம்படுத்த உதவும் ஒரு பிராண்டை இந்தியாவுக்குக் கொண்டு வர, உலகளாவிய குழுவுடன் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.   

சர்வதேச கூட்டாண்மை மூலம் இந்தியாவில் உடல்நலக் காப்பீட்டு வணிகத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை பூனவல்லா வலியுறுத்தினார், 

கடந்த இரண்டு ஆண்டுகளில் சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.  

எதிர்பாராத எதிர்கால தொற்றுநோய்க்கான திறனைக் கட்டியெழுப்ப இத்தகைய முதலீடுகள் தேவைப்படுகின்றன என்றும் சவாலான சூழலுக்கு முன்னதாக தயாராக இருப்பது முக்கியம் என்றும் தெரிவித்தார்.
 
ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஒக்ஸ்போட் பயோமெடிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள தென்னாப்பிரிக்காவின் அஸ்பென் பார்மாகெயார் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

கொரோனா தடுப்சி டோஸ்களை தயாரிக்கும் தொழிற்சாலையின் அபிவிருத்திக்கு நிதியளிப்பதற்காக சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா ஒக்ஸ்போட் பயோமெடிகாவில் 50 மில்லியன் பவுண்டுகளை முதலீடு செய்துள்ளது.

ஆப்பிரிக்க சுகாதார அமைப்புகளை மிகவும் நெகிழ்ச்சியுடனும் சுதந்திரமாகவும் ஆதரிப்பதோடு, நீண்ட காலத்துக்கு ஆப்பிரிக்காவில் சுகாதார விளைவுகளை மேம்படுத்த உதவுவதோடு, எதிர்கால சுகாதார சவால்களை எதிர்கொள்ளக்கூடிய ஒரு நெகிழ்ச்சியான சுகாதார பணியாளர்களை உருவாக்கவும் சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா மற்றும் அஸ்பென் பார்மாகெயார் இடையேயான ஒப்பந்தம் உதவும்.

இந்த இரண்டு வசதிகளும் சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியாவினால் மிகவும் தேவைப்படும் மக்களுக்கு தடுப்பூசிகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் என்றார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X