Editorial / 2021 மே 14 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் கொரோனாத் தொற்றின் இரண்டாவது அலையானது மிகவும் தீவிரமடைந்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், உள்துறைஅமைச்சரும், பாஜ.க யின் மூத்த தலைவருமான அமித்ஷாவை காணவில்லையென டெல்லி பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் நாகேஷ் கரியப்பாவே இப் புகாரை அளித்துள்ளார்.
குறித்த புகாரில் ”மக்களை கவனித்துக்கொள்ள அரசாங்கம் தேவைப்படும்போது அதில் மிகவும் முக்கியப் பொறுப்பிலுள்ள நபர் தனது பொறுப்பு மற்றும் வேலையில் இருந்து காணவில்லை.
மேலும், அரசியல்வாதிகள் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும். சவாலான சூழ்நிலையில் ஓடக்கூடாது. நாடு ஒரு கொடிய தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு மக்கள் ஒரு நெருக்கடியை எதிர்கொள்ளும் போது அதற்கு அரசியல்வாதிகள் பதில் சொல்லும் பொறுப்பு இந்திய அரசு அல்லது பாஜகவுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களை நோக்கியும் உள்ளது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
6 minute ago
12 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
36 minute ago