2025 மே 10, சனிக்கிழமை

“ ஊடுருவ காத்திருக்கும் 300 பயங்கரவாதிகள்”

Mithuna   / 2023 டிசெம்பர் 17 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அசோக் யாதவ் சனிக்கிழமை (16) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஏவுதளங்களில் சுமார் 250 முதல் 300 பயங்கரவாதிகள் ஊடுருவ காத்திருப்பதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. நாங்களும் இராணுவமும் பாதிக்கப்படக்கூடிய அனைத்துப் பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தி எச்சரிக்கையாக இருக்கிறோம்.

எல்லையில் பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் உள்ளனர். கண்காணிப்பு பணிகள் அங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எந்த ஊடுருவல் முயற்சியையும் முறியடிக்க உறுதியாக இருக்கிறோம்” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X