2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

’’எனக்கும் ஒரு கோன் வேணும்!’’ :குரங்கின் ’ஐஸ்’ லீலை.

Mayu   / 2026 மே 03 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் கொடைக்கானல் பகுதியில் பெண் ஒருவர் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த குரங்கு ஒன்று மின்னல் வேகத்தில் அவரிடமிருந்து ஐஸ்கிரீமைப் பிடுங்கியுள்ளது.

ஐஸ்கிரீமைப் பிடுங்கிய குரங்கு, மரத்தின் மீது ஏறி அமர்ந்து அதனை மிகவும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட்டது.

கொடைக்கானலில் தற்போது நிலவும் அதிகப்படியான வெயில் காரணமாகவே, குளிர்ச்சிக்காக குரங்கு இவ்வாறு செய்திருக்கலாம் என அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இக்காணொளி தற்போது இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்து வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .