2026 மார்ச் 07, சனிக்கிழமை

‘ஒத்துழைப்பை பாதிக்கும்’ ஜெய்சங்கர் விளக்கம்

A.K.M. Ramzy   / 2021 மே 19 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூர்

கொரோனாவுக்கு எதிரான போராட்டங்களில் சிங்கப்பூரும் இந்தியாவும் இணைந்தே செயல்பட்டனது. இருப்பினும், நன்கு தெரிந்து கொண்டு பேசவேண்டியவர்களின் பொறுப்பற்ற கருத்துக்கள், நீண்டகால ஒத்துழைப்பை பாதிக்கும் எனக் கூறியுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், புதுடெல்லி முதல்வர், இந்தியா சார்பில் பேசவில்லையென விளக்கம் அளித்துள்ளார்.


சிங்கப்பூரில் குழந்தைகளிடம் தீவிரமாக கொரோனா பரவி வருவதால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இந்தியாவில் காணப்படும் பி.1.617.2 வகை கொரோனா சிங்கப்பூரிலும் பரவி இருப்பதாக அந்நாடு தெரிவித்தது. ஆனால், சிங்கப்பூரில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு இருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, புதுடெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், “சிங்கப்பூருடனான விமான சேவைகளை உடனடியாக மத்திய அரசாங்கம் இரத்துசெய்ய வேண்டும்” என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதன்பின்னர் சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட விளக்கத்தில், “சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு கண்டறியப்பட்டு இருப்பதாக கூறுவதில் உண்மையில்லை” என தெரிவித்தது.
அத்துடன், சிங்கப்பூரில் புதிய வகை உருமாறிய கொரோனா பரவியதாக புதுடெல்லி முதல்வர் வெளியிட்ட டுவிட்டர் தொடர்பாக சிங்கப்பூர் அரசு அதிருப்தி அடைந்தது. இந்திய தூதரை அழைத்து கடும் ஆட்சேபம் தெரிவித்தது. புதுடெல்லி முதல்வருக்கு கொரோனா மாறுபாடுகள் அல்லது சிவில் விமானக் கொள்கை குறித்து பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லையென்றும் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .