A.K.M. Ramzy / 2021 மே 24 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
சென்னை கே.கேநகரில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களுக்கு, ஒன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆசிரியர் ஒன்லைன் வகுப்பின் போதே, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அநாகரீகமாக பேசுவதாகவும், வாட்ஸ்அப் செயலியில் பாலியல் உணர்வை தூண்டும் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், மாணவிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள், உரிய விசாரணை நடத்துமாறு பள்ளி நிர்வாகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக எம்பிக்கள் கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதைதொடர்ந்து, பாலியல் புகார் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, பள்ளிக்கல்வித்துறை கடிதம் அனுப்பியது. பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் ஆகியோரிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின்பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர். குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை கைசெய்த பொலிஸார், அவரிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து கைபேசி மற்றும் லேப்டாப்பு பறிமுதல் செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து புகாரளித்த மாணவியையும் துணை ஆணையர் அலுவலகத்துக்கு வரவழைத்து நடந்த சம்பவங்களை கேட்டறிந்து வருகின்றனர். இதற்கிடையே பாலியல் புகார் எழுந்ததால் ஆசிரியரை பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.
9 hours ago
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
06 Mar 2026