Mithuna / 2023 டிசெம்பர் 18 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வானில் 25 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இலக்குகளை அழிப்பதற்காக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஒ.) ஆகாஷ் ஏவுகணை என்ற அமைப்பை வடிவமைத்து தயாரித்துள்ளது. இந்த ஏவுகணை அமைப்பு ஒரே நேரத்தில் 4 இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்தது.
இந்நிலையில் இந்த ஏவுகணை அமைப்பு ஞாயிற்றுக்கிழமை (17) விமானப்படை அதிகாரிகளால் சோதித்து பார்க்கப்பட்டது.
அப்போது வானில் இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டு இருந்த 4 ஆளில்லா விமானங்களை இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் வெற்றிகரமாக தாக்கி அழித்தது. இது ஒரே ஏவுதல் அலகில் இருந்து செலுத்தப்பட்டது என்பது சிறப்பாகும். இதன் மூலம் ஒரே ஏவுதல் அலகில் இருந்து 4 இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்த ஏவுகணை அமைப்பை கொண்டிருக்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது.
இது தொடர்பாக டி.ஆர்.டி.ஓ. தனது எக்ஸ் தளத்தில், “ஆகாஷ் ஏவுகணை அமைப்பு இந்திய விமானப்படையால் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஒற்றை ஏவுதல் அலகு மூலம் ஒரே நேரத்தில் 25 கிலோ மீட்டர் தூரத்தில் 4 வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் திறனை வெளிப்படுத்திய முதல் நாடு இந்தியா” என குறிப்பிடப்பட்டு இருந்தது.
13 minute ago
20 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
28 minute ago