2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கஞ்சா புகைக்க முயற்சிக்கலாம் ; கிருஷ்ணமூர்த்தியின் கருத்திற்கு எதிர்ப்பு

Freelancer   / 2022 ஜூலை 26 , பி.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மது அருந்துவதை நிறுத்திவிட்டு கஞ்சா புகைக்க முயற்சிக்கலாம் என்று சத்தீஸ்கர் மாநில பாரதி ஜனதா கட்சி (பா.ஜ.க) எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி பந்தி தெரிவித்துள்ள கருத்துக்கு கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகெல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், அம்மாநில பா.ஜ.க, எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி பந்தியின் கருத்துக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. 

பா.ஜ.க, எம்.எல்.ஏ. கருத்து 'பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் மதுப்பழக்கத்தின் காரணமாகவே அதிகரித்து இருக்கிறது. ஆனால், கஞ்சா அடிப்பதால் அத்தகைய குற்றங்கள் அதிகரிக்காது.' என்று பா.ஜ.க எம்.எல்.ஏ. தெரிவித்து இருந்தார். ஒரு மக்கள் பிரதிநிதி கஞ்சா போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருளை எப்படி விளம்பரப்படுத்தலாம் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி வருகிறது. 

விளக்கம் தனது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து பாஜக எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி பந்தி விளக்கம் அளித்து இருக்கிறார். அதில், 'இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இதற்கு முன்பாக மாநில சட்டப்பேரவையிலேயே இது குறித்து விவாதித்தவன் நான். 'பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை போன்ற பிரச்சனைகளுக்கு ஏதோ ஒரு வழியில் மது பழக்கம் காரணமாக இருக்கிறது என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .