2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கடன் கட்டாதோருக்கு ’சாக்லேட்’ பரிசு

Freelancer   / 2023 செப்டெம்பர் 21 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடன் தவணையை உரிய திகதியில் திருப்பித் தராத வாடிக்கையாளர்களின் இல்லத்துக்கு சென்று 'சாக்லேட்' அளிக்கும் நூதன திட்டத்தை இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) அமல்படுத்தத் தொடங்கி உள்ளது.

 இதுகுறித்து வங்கி வட்டாரங்கள் தெரிவித்ததாவது:- கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான மாதாந்த தவணைக் காலம் கடந்த பிறகும், அதற்கான தொகையைச் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மூலம் வங்கி அழைப்பு விடுத்து வருகிறது. அத்தகைய அழைப்புகளை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஏற்காமல் இருப்பது, அவர்களுக்கு கடனைத் திருப்பி செலுத்தும் எண்ணம் இல்லை என்பதற்கான அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.

அதுபோன்ற வாடிக்கையாளர்களிடம் இருந்து கடன் தவணையை வசூலிப்பதற்கு, அவர்களது இல்லத்துக்கோ, அலுவலகத்துக்கோ முன்னறிவிப்பின்றி நேரில் செல்வதே சிறந்த வழியாகும். அதற்காக, சாக்லேட்டுகளுடன் வாடிக்கையாளர்களின் இல்லத்துக்கு வசூல் அதிகாரிகளை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X