2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

கடல் நீர் உள்வாங்கியதால் பரபரப்பு; அலறியடித்து ஓடிய மக்கள்

Ilango Bharathy   / 2022 நவம்பர் 01 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே  கோத்தி என்ற கடற்கரை உள்ளது.

இந்நிலையில் கடந்த 29 ஆம் திகதி மாலை குறித்த  கடற்கரைக்குச் சென்றவர்கள் அங்கு கடல் நீர் உள் வாங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சுமார் 50 மீற்றருக்கு கடல் நீர் உள் வாங்கி இருப்பதைப் பார்த்த மக்கள் இது சுனாமி வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம் எனப்  பீதியடைந்தனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ” அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை. எனவே கடல் நீர் உள்வாங்கியது குறித்து கவலைப்படத் தேவையில்லை”  எனத் தெரிவித்துள்ளது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X