A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 21 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகம்
மக்கள் நீதி மய்யக் கட்சியின் மாநிலச் செயலாளராக செயல்பட்டு வந்த கமீலா நாசர் கட்சியிலிருந்து திடீரென விலகியுள்ளார். அவர் சொந்தக் காரணங்களுக்காக இராஜினாமா செய்துள்ளதாக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளார் சந்தோஷ் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது கட்சியின் மாநிலச் செயலாளர் சென்னை மண்டலம் (கட்டமைப்பு) பதவியை வகித்து வந்த திருமதி.கமீலா நாசர் தனிப்பட்ட காரணங்களால் தனது கட்சிப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவர் கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதை இதன் மூலம் தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கமீலா நாசர் பிரபல நடிகர் நாசரின் மனைவி ஆவார். மக்கள் நீதி மய்யம் தொடங்கியபோதே தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். தேர்தல் களத்தையும் சந்தித்திருக்கிறார்.
இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தற்போது இராஜினாமா செய்திருக்கிறார்.
7 minute ago
22 minute ago
36 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
22 minute ago
36 minute ago
46 minute ago