A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 01 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடில்லி:
'காங்கிரஸ் கட்சியின் தலைவராக, ராகுலை உடனடியாக நியமிக்க வேண்டும்' என, டில்லி காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் பதவியை, ராகுல், ராஜினாமா செய்தார். தற்காலிக தலைவராக, சோனியா செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், டில்லி மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின், டில்லி மாநில காங்கிரஸ் தலைவர் அனில்குமார் கூறியதாவது:நாட்டில் மிகவும் ஆபத்தான அரசியல் சூழல் நிலவுகிறது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அடுத்தடுத்து தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. இதை எதிர்த்து, ராகுல் தொடர்ந்து போராடி வருகிறார்.
ஜனநாயக விரோத சக்திகளை விரட்டவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில், ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தவும், ராகுலை உடனடியாக, காங்கிரஸ் தலைவராக அறிவிப்பதே சிறந்த வழி. இதற்கான தீர்மானம், காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago