2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

காதலியுடன் சாமியார் ஓட்டம்

Editorial   / 2022 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மடத்தில் சாமியாராக இருந்து வந்தவர், கடிதமொன்றை எழுதிவைத்துவிட்டு காதலியுடன் ஓட்டம் பிடித்த சம்பவமொன்று ராமநகர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா சோலூரில் குத்தகே மடம் உள்ளது. இந்த மடத்தின் சாமியாராக இருந்து வருபவர் சிவமகந்தே சுவாமி என்ற ஹரீஷ் சுவாமி.

மடத்தில் இருந்த சாமியார் திடீரென்று மாயமாகி விட்டார். அவர், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணுடன் தான் சாமியார் மடத்தில் இருந்து ஓடி இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக சாமியார் எழுதி வைத்திருந்த கடிதம் மடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடிதத்தில் சாமியாராக வாழ்க்கையை என்னால் தொடர முடியவில்லை. நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வந்தேன். அதனால் மடத்தின் வாழ்க்கையில் இருந்து விடுபட்டுள்ளேன். என்னை யாரும் தேட வேண்டாம். எங்கோ சென்று நிம்மதியாக வாழ உள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X