2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

காலணிகளில் காந்தி; உள்ளாடைகளில் சாமி

Ilango Bharathy   / 2022 நவம்பர் 09 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலணிகளில் மகாத்மா காந்தி படத்தையும், உள்ளாடைகளில் கடவுள் படங்களையும் அச்சிட்டு விற்பனை செய்யும் அமேசான் உள்ளிட்ட ஒன்லைன் வா்த்தக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில், மதுரையைச் சோ்ந்த முத்துகுமார்  என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘அமேசான் உள்ளிட்ட ஒன்லைன் வா்த்தக நிறுவனங்கள், செருப்புகள், உள்ளாடைகளில் மகாத்மா காந்தி மற்றும் கடவுள் புகைப்படங்களை அச்சிட்டு விற்பனை செய்து வருகின்றன.

சர்வதேச ஒன்லைன் வா்த்தக நிறுவனங்களின் இச்செயல்பாடு இந்திய உள்விவகாரங்களில் தலையிடும் வகையில் உள்ளது.  அத்துடன் இது மக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையிலும் உள்ளது.

 

எனவே இந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி மத்திய-மாநில அரசுகளுக்கு மனு அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இம்மனு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X