Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஒக்டோபர் 27 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஷ்மீரைச் சேர்ந்த அப்பிள் விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அதற்கு தீர்வு காணும் வகையில், காஷ்மீரின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று இளைஞர்களால் அலைபேசி செயலியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அப்பிள் பழங்களைச் சேமித்து வளர்த்து, அதன்பின்னர் சந்தைகளில் விற்பனை செய்வதில் விவசாயிகளுக்கு உதவும் வகையில், மூன்று இளைஞர்களும் மேற்கொண்ட தனித்துவமான முயற்சி, பழ உற்பத்தியாளர்களுக்கு அப்பிள்களின் தரம் மற்றும் அளவை அதிகரிக்க வழியமைத்துள்ளது.
தென் மாவட்டங்களான ட்ராலைச் சேர்ந்த எஹ்சான் குதுசி, சோபியானைச் சேர்ந்த இஷான் ஜாவைத் மற்றும் உசைர் ஜாவைத் ஆகியோர் அலைபேசி செயலிமூலம் விவசாயிகளுக்கு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர்.
தொழில்நுட்ப துறையில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் எஹ்சான், இந்திரா காந்தி தேசிய திறந்த பல்கலைக்கழகம் மூலம் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்று பல பன்நாட்டு நிறுவனங்களுடனும் பணியாற்றியுள்ளார்.
அத்தகைய பின்னணியைக் கொண்ட எஹ்சான் தனது மேலும் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து விவசாயிகளின் நல்வாழ்வுக்காக சில புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவர முடிவு செய்தார்.
2018 ஆம் ஆண்டில், தனது பழத் தோட்டத்தில் அப்பிளை உற்பத்தி செய்வதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை அறியாமல் எஹ்சான் குத்தூசி, அந்த தோட்டத்தை அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டபோது இந்த முயற்சி அவர்களின் மனதில் தோன்றியுள்ளது.
கடினமாக உழைக்கும் மக்களுக்கு உதவவேண்டும் என்ற சிந்தனை தூண்டப்பட்டு, தன்னுடைய நண்பர்களை அழைத்து தனித்துவமான தீர்வைக் கொண்டுவந்தாக எஹ்சான் குறிப்பிட்டுள்ளார்.
எப்போதும் சிறந்த பழத்தோட்டங்கள் என்ற சுலோகத்தை கொண்டுவந்த தாங்கள், கடந்த ஆறு மாதங்களில், எங்களால் 6000 விவசாயிகளுடன் தொடர்பு கொள்ள முடிந்ததாகவும் அது நாளாந்தம் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
அப்பிள் மரங்கள், அரச திட்டங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் கிடைத்தாலும், விவசாயிகளுக்கு தங்கள் தோட்டங்களை எவ்வாறு சரியாக அபிவிருத்தி செய்வது என்று இன்னும் தெரியவில்லை என்று குறிப்பிட்ட அவர், அவர்களுக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்றும் தாங்கள் பயன்பாட்டை உருவாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக பல நன்மைகளை வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.
அப்பிளின் தரத்தைப் பொறுத்தவரை, எங்களின் சராசரி ஏ-தர அப்பிள்கள் வெறும் 30 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது, இது நமது தரம் மற்றும் அளவை அதிகரிக்கும் திறனைக் குறிக்கிறது என்று அவர் கூறினார்.
விவசாயிகளுக்கு உதவுவதற்காக நிகழ்நேர வானிலை நிலையை கண்காணிக்க காஷ்மீரை 30 மைக்ரோ வானிலை வலயங்களாக பிரித்துள்ளதாக குறிப்பிட்ட எஹ்சான், மரத்தை சேதப்படுத்தும் பூச்சி எப்போது வளரும் என்பதை வானிலையுடன் தொடர்புபடுத்துவதால், மருந்துகளை எப்போது தெளிக்க வேண்டும் என்ற எச்சரிக்கையை விவசாயிகள் பெறுவர் என்றார்.
மழை, அதிக வெப்பம் போன்ற காரணங்களால் ஏற்படும் பூஞ்சை நோய்களும் பரிசோதிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விழிப்பூட்டலுக்காக தரவுகள் அனுப்பப்பட்டு, மண்ணின் தரத்தை சரிபார்க்க, இலவசமாக மண் வழங்குவதாக அவர் கூறினார்.
மழை, அதிக வெப்பம் போன்ற காரணங்களால் ஏற்படும் பூஞ்சை நோய்களும் பரிசோதிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விழிப்பூட்டலுக்காக தரவுகள் அனுப்பப்பட்டு, மண்ணின் தரத்தை சரிபார்க்க, தங்களுடன் இணையும் விவசாயிகளுக்கு இலவசமாக மண் பரிசோதனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அப்பிளை சேமிப்பது மற்றும் வளர்ப்பது மட்டுமின்றி, தாங்கள் அமைத்துள்ள சந்தை மூலம் விவசாயிகள் தங்கள் விருப்பப்படி பழங்களை விற்க உதவுவதற்காக செயலி மூலம் விலை எச்சரிக்கை வழங்கப்படுகிறது என்றார்.
விவசாயிகள், தங்களது தோட்டங்களில் அதிக நேரம் செலவிடும் வேண்டும் மற்றும் வீடுகளில் இருந்தவாறே தகவல்களைப் பெறவேண்டும் என்ற பின்னணியிலேயே இந்த செயலி உருவாக்கப்பட்டதாக எஹ்சான் கூறினார்.
ஊகங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்து விவசாயிகளுக்கு முழுமையான தீர்வாக இருக்க விரும்புவதாகவும் அவர்களுக்கு நிதியுதவி செய்யும் பங்காளிகளை உறுதிசெய்யவும் தாங்கள் முயற்சித்து வருவதாகவும் குறிப்பிட்ட அவர், அதற்கான செயல்முறை நடந்து வருகிறது என்றார்.
31 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago