2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

காஷ்மீரில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து அமர்வு

Freelancer   / 2022 ஒக்டோபர் 30 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

"அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை மற்றும் சிவில் சமூகத்தின் பங்கு" என்ற மாபெரும் நிகழ்ச்சியை, இளைஞர் அபிவிருத்தி மையம் மற்றும் அதன் முன்முயற்சியான டவுன்ரவுன் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவை ஸ்ரீநகரில் உள்ள சங்கர் மாலிலுள்ள 7சீ உணவகத்தில் நடத்தின.

சமூகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் இந்த தலைப்பில் உரையாற்றியதுடன், இந்த எரியும் பிரச்சினை குறித்து தங்கள் கருத்துக்களையும் முன்வைத்தனர்.

காஷ்மீரில் போதைப் பழக்கத்தின் ஒட்டுமொத்த தரவு உள்ளீட்டை அதிகரிப்பது குறித்து பேச்சாளர்கள் வலியுறுத்தியதுடன், குறிப்பாக திருமணத்தின் போது இரு பாலினருக்கும் மருத்துவச் சான்றிதழ்கள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றனர்.

இதனால் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தால் எழும் எந்த ஆபத்தான தொற்று நோய்களால் பாதிக்கப்பட மாட்டார்கள் எனவும் விழிப்புணர்வு கருத்துக்களை முன்வைத்தனர்.  

போதைப்பொருள் துஷ்பிரயோகம், போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் சமூகப் புறக்கணிப்பு ஆகியவற்றில் மத போதனைகளில் ஒட்டுமொத்த விழிப்புணர்வு மற்றும் தீர்வுகளை ஏற்படுத்துதல் ஆகியவை குறித்தும் உரையாற்றப்பட்டது.

போதைப்பொருள் அச்சுறுத்தல் வேரோடு அகற்றப்படும் என்றும், இளைஞர் அபிவிருத்தி மையத்தின் தலைவர் இம்தியாஸ் சாஸ்தி குறிப்பிட்டார்.

அனைத்து தொடர்புடைய பங்குதாரர்களிடம் இருந்தும் பயனுள்ள மற்றும் திறமையான ஒருங்கிணைவு மூலம் போதைப்பொருள் பாவனையை அதன் வேர்களில் இருந்து நசுக்க காஷ்மீர் இயக்கத்தை உருவாக்குவதாக அவர் உறுதியளித்தார்.

காஷ்மீரில் போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட மத போதகர்களை, குறிப்பாக மசூதிகளில் ஒரு நிறுவனமாகப் பயன்படுத்துவதாகவும் உறுதியளிக்கப்பட்டது.

கிராண்ட் முப்தி நசீர் உல் இஸ்லாம் போன்ற மதப் பிரமுகர்கள் முதல் ஓய்வுபெற்ற நீதிபதி பிலால் நஸ்கி, நிர்வாக புத்திஜீவி அப்துல் சலாம் மிர், பிரபல மருத்துவர் அப்துல் வாஹித், வர்த்தகப் பிரமுகர் ஷேக் ஆஷிக் போன்ற சட்ட வல்லுநர்கள் வரை உரையாற்றினர்.

டைனமிக் போலீஸ் அதிகாரி ஓவைஸ் வானி மற்றும் காஷ்மீரின் பிரபல பெண் பத்திரிகையாளர் பர்சானா மும்தாஜ் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன், டொக்டர் ஃபசல், டொக்டர் மன்சூர் நாசர் மற்றும் ஷபீர் அகமது ஆகியோர் போதைக்கு எதிரான பிரபல ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X