Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 செப்டெம்பர் 19 , பி.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், குறைகடத்தி (செமிகண்டக்டர்) திட்டத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்துக்கு அமைய, இந்தியாவின் வேதாந்தா மற்றும் தாய்வானின் ஃபொக்ஸ்கான் ஆகிய நிறுவனங்கள் 19.5 பில்லியன் டொலர் முதலீடு செய்யவுள்ளன.
குஜராத்தின் மிகப்பெரிய நகராக அகமதாபாத்துக்கு அருகே செமிகண்டக்டர் மற்றும் காட்சி முறை உற்பத்திக்கான தனி அலகுகளை உருவாக்க நிறுவனங்கள் இரண்டும் திட்டமிட்டுள்ளன.
மூலதனச் செலவு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட மானியங்களை குஜராத்தில் இருந்து கூட்டு முயற்சியாக நிறுவனங்கள் பெற்றதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.
இந்த முயற்சியால் 1 இலட்சத்துக்கும் க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று குஜராத் முதல்வர் பூபேந்திரபாய் படேல் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப பங்காளியாக ஃபொக்ஸ்கான் நிறுவனமும் வேதாந்தா நிறுவனம் நிதியுதவியும் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைப்பதறக்கான நம்பிக்கையை மாநிலத்தின் உட்கட்டமைப்பு மற்றும் அரசாங்கத்தின் தீவிர ஆதரவு அதிகரிப்பதாக ஃபொக்ஸ்கான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆரம்ப 10 மில்லியன் டொலர்களைத் தாண்டி, செமிகண்டக்டர் உற்பத்தியில் முதலீடு செய்பவர்களுக்கு ஊக்கத்தொகையை விரிவுபடுத்தவுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
26 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
26 Jul 2025