2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

குஜராத்தில் சிங்கங்களின் எண்ணிக்கை உயர்வு

Freelancer   / 2025 மே 22 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய சிங்கங்கள் குஜராத்தின் கிர் காடுகளில் மட்டுமே காணப்படும். தற்போது கிர் தேசிய பூங்காவுக்கு வெளியேயும், காடுகள் அல்லாத மற்றும் கடலோர பகுதிகள் உட்பட குஜராத்தின் 11 மாவட்டங்களிலும் இந்த சிங்கங்கள் பரவி உள்ளன. குஜராத் மாநில வனத்துறையால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிங்க கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

அதன்படி 6ஆவது ஆசிய சிங்க கணக்கெடுப்பு கடந்த 10ஆம் திகதி தொடங்கி நடைபெற்றது. 3,000 தன்னார்வலர்கள் உதவியுடன் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்நிலையில், கணக்கெடுப்பு விவரங்கள் குறித்து வன தலைமை பாதுகாவலர் ஜெய்பால் சிங் கூறியதாவது,

“ஆசிய சிங்கங்கள் கடந்த 5 ஆண்டுகளில் 217 அதிகரித்துள்ளன. மொத்த ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 891ஆக உயர்ந்துள்ளது. கிர் தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயத்தில் மட்டும் 384 சிங்கங்கள் காணப்பட்டன. எல்லைக்கு வெளியே 507 சிங்கங்கள் காணப்பட்டன. இதில் 196 ஆண் சிங்கங்கள், 330 பெண் சிங்கங்கள், 140 இளம் சிங்கங்கள், 225 சிங்கக் குட்டிகள் அடங்கும்.

“கடைசியாக 2020ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 674 சிங்கங்கள் இருந்தன. போர்பந்தரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள பர்தா சரணாலயத்தில் 17 சிங்கங்கள் உள்ளன. சிங்கங்களை அடையாளம் காண உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் மற்றும் ரேடியோ காலர்கள் போன்ற உயர் தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்பட்டன” என தெரிவித்தார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X