A.K.M. Ramzy / 2021 மே 31 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் உணவின்றி தவிக்கும் குரங்குகளுக்கு சமூக ஆர்வலர்கள் உணவளித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வம்பன் மருத்துவக் கல்லூரி, சித்தன்னவாசல் உள்ளிட்ட இடங்களில் குரங்குகள் அதிகளவில் உள்ளன. இந்த குரங்குகளுக்கு அவ்வழியே செல்வோர் பழ வகைகள், பிஸ்கட் போன்ற உணவு பொருட்களை வழங்குவது வழக்கம்.
இந்நிலையில், மருத்துவக் கல்லூரி அருகே சாலையோரம் உள்ள குரங்குகளுக்கு உணவு அளிக்கும் வகையில் அதே இடத்தில் தண்ணீர் ஊற்ற ஒரு தொட்டியும், பழம்போன்ற உணவு பொருட்களை வைப்பதற்கு இரண்டு தொட்டிகளும் புதுக் கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அண்மை யில் கட்டப்பட்டன.
இந்த தொட்டிகளில் தேவைக்கு ஏற்ப அந்த அமைப்பினருடன், சமூக ஆர்வலர்களும் உணவு பொருட்களை வைத்து செல்கின்றனர். இவற்றை அங்குள்ள குரங்குகள் உண்டு பசியாறி வருகின்றன.
7 minute ago
22 minute ago
36 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
22 minute ago
36 minute ago
46 minute ago