Editorial / 2021 மே 25 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாம் அனைவரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு நடைபெறும் வளைகாப்பு நிகழ்வைப் பற்றி அறிந்திருப்போம்.
ஆனால் இங்கு ஒரு தம்பதி தமது வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த செல்வம், ரேவதி தம்பதியர் ‘டைசன்‘ என்ற பொமேரியன் நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர்.
இத்தம்பதியருக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் டைசனை தமது மகளாகவே நினைத்து வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் டைசன் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததையடுத்து அதற்கு வளைகாப்பு நடத்தி பார்க்க ஆசைப்பட்ட அவர்கள் அழைப்பிதழைத் தயார் செய்து, உறவினர்களுக்கு 'வட்ஸ் அப்'பில் அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து நேற்றைய தினம் டைசனுக்கு பட்டாடை, வளையல்கள் மற்றும் நகைகள் அணிவித்து வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவமானது அப்பகுதியிலுள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
06 Mar 2026
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
06 Mar 2026
06 Mar 2026