A.K.M. Ramzy / 2021 மே 24 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
டில்லி:
கோவெக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு வழங்கி பரிசோதிக்கும் திட்டத்தை ஜூன் மாதத்திலிருந்து தொடங்க உள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் கோவாக்சின், கொவிஷீல்ட் மருந்துகள் மட்டுமே மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த இரு மருந்துகளும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு செலுத்தப்படவில்லை.
2 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் மருந்து பரிசோதிக்கப்பட உள்ளது. இந்த நிறுவனம் இரண்டாவது கட்டம் மற்றும் மூன்றாவது கட்ட சிகிச்சை பரிசோதனைகளை நடத்த மத்திய மருந்துத் தரக்கட்டுப்பாடு அமைப்பின் வல்லுநர் குழு அனுமதியளித்து உள்ளது. இந்த பரிசோதனைகள் டில்லி எய்ம்ஸ், பாட்னா எய்ம்ஸ், நாக்பூர் எம்.ஐ.எம்.சி., மருத்துவமனை உள்ளிட்ட 525 இடங்களில் நடத்தப்பட உள்ளன.
06 Mar 2026
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
06 Mar 2026
06 Mar 2026