2025 ஜூலை 26, சனிக்கிழமை

குழாயில் தண்ணீருக்குப் பதிலாக வந்த `கள்ளச் சாராயம்`

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 13 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள சன்சோடா கிராமத்தில்  கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாகப்  பொலிஸாருக்கு அண்மையில் ரகசியத்  தகவல் ஒன்று வந்துள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதிக்குப்   பொலிஸார் சென்றபோது,அங்கு   குழாய் ஒன்றில் தண்ணீருக்குப்  பதிலாகக்  கள்ளச்சாராயம் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முதலில் அக் குழாயில்சுத்தமான  நீர் வருவதாக  நினைத்த பொலிஸாருக்குப் பின்னர் அது கள்ளச்சாரயம் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நிலத்தை தோண்டி பார்த்தபோது, 7 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த  தாங்கியில் சாரயத்தை பதுக்கி வைத்து, தேவைப்படும்போது  பொலித்தீன் பைகளில்  விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X