2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கென்யாவில் மாயமான இந்தியர்கள் குறித்து கழுகுப் பார்வை

Freelancer   / 2022 நவம்பர் 20 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கென்யாவில் காணாமல் போன இந்திய பிரஜைகளான ஜெய்த் சமி கித்வாய் மற்றும் முகமது சுல்பிகார் அகமது கான் விவகாரத்தில் கென்யா தரப்புக்கு அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கியுள்ளது என்றும் விவகாரம் தொடர்பான முன்னேற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான முன்னேற்றங்களை நாங்கள் மிகவும் நெருக்கமாகப் பின்பற்றுகிறோம் எனவும் பாதிக்கப்பட்ட இந்தியக் குடும்பங்களுடனும் தொடர்பில் இருக்கிறோம் எனவும் தெரிவித்த  வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, தங்களது உயர்ஸ்தானிகராலயம்  அவர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாலாஜி டெலிஃபிலிம்ஸ் முன்னாள் சிஓஓ ஜுல்பிகர் அஹ்மத் கான் மற்றும் முகமது ஜெய்த் சமி கித்வாய் ஆகிய இந்திய பிரஜைகள் ஜூலை நடுப்பகுதியில் வெஸ்ட்லேண்ட்ஸில் உள்ள பிரபலமான விடுதியில் இருந்து காணாமல் போயிருந்தனர் என்று கென்ய ஊடகங்கள் தெரிவித்தன.

இரவு 11.53 மணிக்கு விடுதியில் இருந்து வெளியேறிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, இரண்டு இந்திய பிரஜைகள் மற்றும் அவர்களின் சாரதி ஆகியோர் நிகோடெமஸ் முவானியா ஆகியோர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. 70 நாட்களுக்கும் மேலாக மூவரையும் காணவில்லை.

இந்திய புலனாய்வுக் குழு இந்த வழக்கு தொடர்பாக கென்யா தரப்புக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் டிஎன்ஏ உதவி மற்றும் கென்யா தரப்பு விசாரணைகளை மேற்கொள்ளும் போது தடயவியல் பகுப்பாய்வு உதவி உட்படவழங்கியதாக  அரிந்தம் பாக்சி  கூறினார்
.
நவம்பர் 1 மற்றும் 3 ஆம் திகதிகளில் நைரோபிக்கு இந்திய புலனாய்வுக் குழு ஒன்று சென்றது குறிப்பிடத்தக்கது

முன்னதாக அக்டோபர் மாதம், புதுதில்லியில் உள்ள கென்யா உயர் ஸ்தானிகரும் காணாமல் போன இந்திய பிரஜைகளின் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சுதெரிவித்தது.

இரண்டு இந்திய பிரஜைகளும் கென்யாவில் ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவின் தேர்தல் பிரச்சார தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப  குழுவில் சேர இருந்தனர் என்றும் பல கென்ய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

இதேவேளை, தங்கள் உறவினர்களைக் கண்டறியும் முயற்சியில் விசாரணையை முடிக்குமாறு பொலிஸாரை கானின் குடும்பத்தினர் வலியுறுத்தினர். 

இந்த விவகாரத்தை கையாளவும், விசாரணைகளை விரைவுபடுத்தவும், பொலிஸ் தலைமை ஆய்வாளர் நூர் காபோவை குடும்பத்தினர் வலியுறுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .