2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கைக்குட்டையைக் கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்த இளைஞன்

Editorial   / 2022 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் பிரஞ்சால் தூபே. இவர் தினமும் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகிறார். ஒருநாள் இவர் பயணம் செய்யும்போது அவர் கொண்டு வந்த உணவு ரயில் பெட்டியில் கீழே சிந்திவிட்டது. இதையடுத்து சிறிதும் யோசிக்காத தூபே, தனது கைக்குட்டையைக் கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்தார்.

இதைப் பார்த்த சக பயணியான சுபம் வர்மா என்பவர் இதை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதைப் பார்த்த பலரும் இளைஞர் தூபேவுக்கு பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.

 இந்தப் புகைப்படம் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து இளைஞர் பிரஞ்சால் தூபேவைப் பாராட்டி மை கவ் இணையதளத்தில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது புகைப்படமும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X