2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கையில் என்னப்பா காயம்! கனிவுடன் விசாரித்த பிரதமர்!

Freelancer   / 2022 ஜூலை 29 , பி.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னையில் இன்று நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் போது மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பிரதமர் மோடி, கையில் காயத்துடன் பட்டம் பெற வந்த இளைஞரிடம் நலம் விசாரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று விமான மூலம் சென்னை வந்தடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியினை பிரதமர் தொடங்கி வைத்தார்.

நேற்று இரவு சென்னை ஆளுநர் மாளிகையில் தங்கிய பிரதமரை பா.ஜ.க தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சந்தித்து பேசினர்.

தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் 69 பேருக்கு தங்கப்பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

வணக்கம் எனக் கூறி தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி, ' பெருமைமிகு அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் இன்று பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள். அண்ணா பல்கலைக் கழகத்தில் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் பங்களிப்பை குறிப்பிட்டு பேசிய பிரதமர், இந்த நாட்டிற்காக உழைப்பதிலும் கனவு காண்பதிலும் அவரின் அடிச்சுவடுகளை நீங்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

முன்னதாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் என்ற மாணவருக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். அப்போது அந்த மாணவரின் விரலில் காயம் பட்டு கட்டு போடப்பட்டு இருந்தது. பட்டம் வழங்கிய பின் இதனை கவனித்த பிரதமர் மோடி அந்த மாணவரை தோளை பிடித்து என்ன ஆச்சு என அன்போடு விசாரித்தார்.

பிறகு அந்த மாணவருக்கு வாழ்த்துக்கள் கூறி அங்கிருந்து பிரதமர் அனுப்பி வைத்தார். தொடர்ந்து இதுகுறித்து பேசிய அந்த மாணவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தான் திருச்சியில் படித்து வருவதாகவும் தற்போது தங்கப்பதக்கம் மற்றும் பிரதமரின் கையில் பட்டத்தை பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தனக்கு காயம் பட்டதை குறித்து அன்போடு பிரதமர் விசாரித்தது தான் எதிர்பாராதது என அந்த மாணவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .