A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 19 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாம் அலை இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது. அன்றாட தொற்று எண்ணிக்கை 2.6 இலட்சத்தைத் தாண்டிப் பதிவாகிறது. இரண்டாவது அலையின் வீரியத்தால் பல மாநிலங்களில் ஒக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்து வருகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு மத்திய அமைச்சர் அளித்த பேட்டியின் போது பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
'கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கட்டுக்கடங்காத வகையில் அதிகரித்துக் கொண்டே சென்றால் அதனால் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். நாங்கள் எந்தச் சூழ்நிலையிலும் மாநில அரசுகளுடன் துணை நிற்கிறோம்.ஆனால், அதேவேளையில், மாநில அரசுகள் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். ஒக்ஸிஜன் சிலிண்டர்களுக்கான தேவை அதிகரித்துவருகிறது. தேவையை எதிர்கொள்வது எவ்வளவு முக்கியமானதோ அதேபோல் தேவையைக் கட்டுப்படுத்துவதும் முக்கியம்.
நோயாளிகளுக்கு தேவைப்படும்போது மட்டுமே ஆக்ஸிஜன் பயன்படுத்த வேண்டும். தேவையில்லாதபோது ஆக்ஸிஜன் பயன்படுத்தப்படுவதாக எனக்குத் தகவல்கள் கிடைக்கின்றன. ஓக்ஸிஜன் சிலிண்டர்களை மாநில அரசுகள் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும்'. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
14 minute ago
22 minute ago
49 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 minute ago
49 minute ago
52 minute ago