2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

கொரோனாவா? எங்களுக்குத் தெரியாது

A.K.M. Ramzy   / 2021 ஜூன் 13 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொடைக்கானல்

மலைகளின் இளவரசி கொடைக்கானல் உருவாவதற்கு அடிப்படையாக இருந்தது வெள்ளகவி கிராமம். இந்த கிராமமானது சுமார் 400 வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக அப்பகுதி கிராம மக்கள் கூறுகின்றனர்.  

மேலும், வெள்ளகவி கிராமத்திலிருந்து கும்பக்கரை அருவி வழியாக பெரியகுளம் செல்வதற்கும் 6 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டும். இந்த கிராமம் வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ளது. வெள்ளகவி கிராமத்தில் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இங்கு ஏலக்காய், கோப்பி, அவக்கோடா, மிளகு உள்ளிட்ட மலைப்பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கும் விளைபொருட்களை தலை சுமையாகவும், குதிரை மூலம் கொண்டு சென்று விற்று தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி பலரும் இறந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கொரோனா தொற்று என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? எனவும் எங்களது கிராமத்தில் கொரோனா அச்சம் என்பது துளி கூட இல்லை என கூறுகின்றனர்.

இது குறித்து கிராம மக்களிடம் கேட்டபோது, இதுவரை சளி, காய்ச்சல், தலைவலிக்கு கூட மருந்து மாத்திரைகள் பயன்படுத்தாமல் கைவைத்தியம் செய்து கொள்வதாகவும், இங்கு விளைவிக்கப்படும் சத்தான காய்கறிகளை அதிகம் உண்பதாலும், மூலிகை வனப்பகுதிக்கு நடுவே எங்கள் கிராமம் அமைந்துள்ளதால் நோய் தொற்று இல்லாமல் வாழ்வதாக கூறுகின்றனர்.

மேலும் முகக்கவசம் இல்லாமலும் வழக்கம் போல் அன்றாட பணிகளை செய்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .