A.K.M. Ramzy / 2021 மே 18 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடில்லி:
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி, இதுவரை 270 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்' என, இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐ.எம்.ஏ.,) தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ கூட்டமைப்பு தலைவர் மருத்துவர் ஜெயலால் தெரிவித்துள்ளதாவது: கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் சிக்கி இதுவரை நாடுமுழுவதும் 270 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் ஐ.எம்.ஏ., முன்னாள் தலைவரும் பிரபல மருத்துவரான கே.கே.அகர்வால் உயிரிழந்துள்ளார்.
மிக இளவயதில் புதுடில்லி ஜி.டி.பி., மருத்துவமனையில் பணியாற்றிய 25 வயது அனாஸ் முஜாகித் கடந்த 9ஆம் திகதி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். மருத்துவர்களில் உயிரிழந்தவர்களில் வயதானவர்களில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர் மருத்துவர் சத்தியமூர்த்தி தனது 90 வயதில் உயிரிழந்தார்.
அதிகபட்சமாக பிஹார் மாநிலத்தில் 69 மருத்துவர்கள் இதுவரை கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அதைத் தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் 37 மருத்துவர்கள், புதுடில்லியில் 29 பேர், ஆந்திராவில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா முதல் அலையில் 748 மருத்துவர்கள் உயிரிழந்த நிலையில் இரண்டாவது அலை முடிவதற்குள் 270 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலான மருத்துவர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். முதல் அலையைவிட, இரண்டாவது அலை மிகவும் மோசாக இருந்து வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
06 Mar 2026
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
06 Mar 2026
06 Mar 2026